வீட்டிலிருந்தபடியே   மாணவர்கள் தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் – சென்னை பல்கலைக்கழகம் விளக்கம்

  வீட்டிலிருந்தபடியே    மாணவர்கள்ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படி, இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை குறித்த தேர்வு அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன் படி, இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 14 ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 18 பக்கங்களுக்கு மேல் விடை எழுதி ஆன்லைனில் அனுப்பபிவைக்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதனால், ஆன்லைனில் அனுப்பப்படும் கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து  கொண்டு  வீட்டில் தேர்வு எழுதி மாணவர்கள் புகைப்படம் எடுத்து மீண்டும் ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்று பல்கலைக்கழக நணை வேந்தர் கௌரி விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.