தோல்வி பயத்தால் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை…!

தோல்வி பயத்தால் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை.

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி ஜெயலட்சுமி தம்பதியினர்.

இவர்கள் இருவரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். அதில் இரண்டாவது மகனான கனிமொழி நாமக்கல் கிரீன் கார்டனில் பன்னிரண்டாம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்ற நிலையில் தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

 கனிமொழி நேற்று நீட் தேர்வினை எழுதி விட்டு வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணம், நீட் தேர்வில் தோல்வி பயத்தால் என்று கனிமொழியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.