மாணவி தற்கொலை முயற்சி – 2 தனிப்படைகள் அமைப்பு

விழுப்புரம் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், 2 தனிப்படைகள் அமைப்பு.  

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பொறியியல் கல்லூரி என்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென்று கல்லூரி முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி  செய்துள்ளார்.

கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment