#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. சிகிச்சை வார்டாக மாறும் மாணவர்கள் விடுதி!

#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. சிகிச்சை வார்டாக மாறும் மாணவர்கள் விடுதி!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை 250 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவரும் நிலையில், நான் ஒன்றுக்கு 5,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைய தொடங்கியது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. அந்தவகையில், மாணவர் விடுதியை சுத்தப்படுத்தி, கொரோனா நோயாளிகள் தங்கும் வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Join our channel google news Youtube