ஆன்லைன் கல்விக்கு ஸ்மார்ட்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்! உதயநிதி ஸ்டாலின் வேதனை!

ஆன்லைன் கல்விக்கு ஸ்மார்ட்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட

By leena | Published: Aug 02, 2020 09:15 AM

ஆன்லைன் கல்விக்கு ஸ்மார்ட்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிற நிலையில், பண்ரூட்டியில், சிறு விவசாயியான தந்தையால் ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்கித்தர முடியவில்லை என 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், யு-டர்ன் துறையாகி வரும் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்பு சிக்கல்கள் நீக்கி பிஞ்சுகளின் மனநலத்தையும், உயிரையும் காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc