வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!

வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஹரியானாவில் விவசாயிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய சங்கத்தினர் சாலையை வழி மறித்து போராட்டம் நடத்தியைத்தடுத்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை அழைத்திருந்தார்.

இதுபோன்று பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நடத்தி வரும் டிராக்டர் பேரணி பஞ்சாப் மொகாலி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பேரணி தேசிய நெடுஞ்சாலை வழியாக அம்பாலாவை சென்றடைந்தது. மேலும் வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வரும் 25-ஆம் தேதியும் விவசாய அமைப்புகளின் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தையொட்டி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

Latest Posts

#IPL2020: சிறப்பாக விளையாடிய சூர்யகுமார்.! மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!
#IPL2020: அரை சதம் அடித்த படிக்கல் ! மும்பை அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்.!
மிலாது நபி தினத்தையொட்டி அக்.30-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
#IPL 2020 டாஸ் வென்ற MI... அதிரடி காட்ட காத்திருக்கும் RCB...!
மகனின் பிறந்தநாளை கொண்டாட 1400கிமீ ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி.!
புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி!
பிலிப்பைன்ஸை தொடர்ந்து வியட்நாமை தாக்கும் மோலேவே புயல்.!
#Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!
பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை - 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!