எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் !சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்

தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை கொண்டு இயங்கி வருகிறது.

ஜூலை 1ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. விடுபட்ட லாரிகளுக்கும்,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தது எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.

இதனையடுத்து போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன் பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.இதன் பின்  எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்  என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரிகள் சங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.இதனால்  வழக்கு விசாரணையை  2 வாரத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.