தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு மீது இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

இதன் பின் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர் வரும் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. அதேபோல்  அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, ஒருநபர் குழு எப்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும், அதை நிறைவேற்ற எவ்வளவு காலமாகும் என்று பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.