அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!

எந்த  காரணத்துக்காகவும், 12-ம் வகுப்புக்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில பள்ளிகள் 9,10 உள்ளிட்ட சில வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதாக குற்றசாட்டுகள்  எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலர், எந்த  காரணத்துக்காகவும், 12-ம் வகுப்புக்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என்றும்,  உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.