புயல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அடுத்தடுத்து புயல் தாக்கும் என வதந்தி பரப்ப கூடாது. அப்படி வதந்தி பரப்பினால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த சில வாரங்களாக நிவர் மற்றும் புரவி புயல், தமிழகத்தை தாக்கிய நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் மெல்ல மெல்ல இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து புயல் உருவாகுவதாக இணையத்தில் வதந்தியான செய்திகள் வெளியாகி வந்தது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், அடுத்தடுத்து புயல் தாக்கும் என வதந்தி பரப்ப கூடாது என்றும், அப்படி வதந்தி பரப்பினால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.