செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை…! திரும்ப பெறப்பட்ட உத்தரவு…

  • செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பித்த டெல்லியில் ஜி.பி.பண்ட் மருத்துவமனை. 
  • கண்டங்கள் வலுத்ததை தொடர்ந்து உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

டெல்லியில் ஜி.பி.பண்ட் என்ற மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் பேசும்போதும், சில நோயாளிகளுடன் பேசும்போது மலையாளத்தில் பேசுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது என்றும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்றும் தங்களது தாய்மொழியை பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் எழுதியுள்ள இந்த சுற்றறிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் செவிலியர்கள் தங்களுடைய தாய் மொழியில் பேசுவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இருந்தும் பல செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கைக்கு, மற்ற மாநிலங்களை சேர்ந்த செவிலியர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது என்கிற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.