பரபரப்பான படப்பிடிப்பில் வலிமை படக்குழு..!!

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது.  இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் 10 நாட்கள் மட்டும் வலிமை படத்திற்கான படப்பிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இதனால் வலிமை படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். அங்கு தற்போது மிரட்டலான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு, வி.ஜே பானி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளார்கள்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.