உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இப்புயலுக்கு பிபோர்ஜோய் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

கோவாவிற்கு 920 கி.மீ., மேற்கு தென்மேற்கிலும் மும்பைக்கு 1,100 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெற்று அடுத்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரப்புயலாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

கனமழை:

குறிப்பாக, அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை:

அரபிக்கடல் பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதைத் தொடர்ந்து தீவிரமடைந்தால், தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.