37 C
Chennai
Sunday, June 4, 2023

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

WTCFinal2023 : இதே மைதானத்தில் கடைசியாக ‘ஹிட்மேன் ‘செய்த தரமான சம்பவம்…ட்ரெண்ட் ஆகும் வீடியோ.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் (ஜூன்) 7-ஆம்...

வங்கக்கடலில் உருவாகிறது புயல்…இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை 

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை 

இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

புயல் 

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே10ஆம் தேதி புதிய புயல் உருவாகிறது என்றும், அந்த புயலுக்கு மோச்சா (Mocha) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவாகி வங்க தேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.