பேனர் வைக்கும் பணத்தில் பல நல்ல விஷயங்களை செய்ய உள்ள சூர்யா ரசிகர்கள்!

சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் இனி அஜித் படத்திற்கும், அதனை தொடர்ந்து எந்த ஒரு சுப காரியங்களுக்கும் பேனர் வைப்பதில்லை என அறிவித்து இருந்தனர். நேற்று தளபதி விஜய் கூறியதன் பெயரில் பிகில் படத்தின் இசைவெளியீட்டிற்கு பேனர் வைப்பதில்லை என காஞ்சிபுரம் விஜய் ரசிகர்கள் அறிவித்து இருந்தனர்.

தற்போது சூர்யா ரசிகர்கள் அதற்கும் ஒருபடி மேலே போய், செப்டம்பர் 20இல் வெளியாகும் காப்பான் படத்திற்காக பேனர் வைக்கும் செலவில் அரசு பள்ளியை தத்தெடுத்து அதில் கழிவறை செய்துகொடுக்க உள்ளனராம். அதே போல நெல்லை சூர்யா ரசிகர்கள் 200 ஹெல்மட் பொதுமக்களுக்கு கொடுக்க உள்ளனராம். பேனர் பணம் இப்படி நல்ல விஷயங்கள் செய்ய பயன்படுத்தப்படுவது பாராட்டக்கூடிய விஷயமே!

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.