10.8 C
London
Sunday, October 17, 2021

திருடப்பட்ட கிரெடிட் கார்டு 25 டாலருக்கும், ஜிமெயில் 80 டாலருக்கும் டார்க் வெப்பில் விற்பனை..!

ஹேக்கர்களால் திருடப்பட்ட தரவு(data) ஆன்லைனில் எவ்வாறு விற்கப்படுகிறது. டார்க் வெப்பில் இதற்கென்று சந்தை உள்ளது. இந்நிலையில், Data privacy and cybersecurity research நிறுவனமான Privacy Affairs  சமீபத்தில் டார்க் வெப்பில் தரவு(data) விற்க்கப்படும் விலையை வெளியிட்டுள்ளது.

திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் சராசரி விலை ஆண்டுக்கு ஆண்டு எப்படி ஏற்ற இறக்கமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. உங்கள் திருடப்பட்ட கிரெடிட் கார்டு , டிஜிட்டல் கட்டண கணக்குகள், கிரிப்டோகரன்சி வாலட்கள், சமூக ஊடக கணக்குகள், ஸ்ட்ரீமிங் சேவைகள், போலி பாஸ்போர்ட் விவரங்கள் உட்பட எல்லாவற்றிற்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் க்ளோன் செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளை (Cloned credit card) ஒரு சுமார் 25 டாலர் (ரூ 1,883) டார்க் வெப்பில் விற்கின்றனர். PIN உடன் கூடிய மாஸ்டர்கார்டு அல்லது விசா அட்டை ஒவ்வொன்றும் 25 டாலர் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் 35 டாலர் செலவாகும். 1000 டாலர் வரை கணக்கு இருப்பு கொண்ட கிரெடிட் கார்டுகளுக்கு 150 டாலரில் கிடைக்கும். 5000 டாலர் வரை இருப்பு கிரெடிட் கார்டுகளுக்கு 240 டாலர் மூலம் டார்க் வெப்பில் பெறலாம்.

நாசா, மெக்டொனால்ட்ஸ், மைக்ரோசாப்ட், டி-மொபைல், லாக்ஹீட் மார்டின், சைபர் செக்யூரிட்டி நிறுவனங்களான ஃபயர் ஐ மற்றும் சோலார்விண்ட்ஸ் போன்ற குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் 2020ல் மட்டும் கடுமையான பாதிக்கப்பட்டதாக  பாதுகாப்பு ஆய்வாளர் சக்கரி இக்னோஃபோ கூறுகிறார். இந்த திருடப்பட்ட விவரங்களின் டார்க் வெப்பில் சந்தை விலைகளை கடந்த ஆண்டின் விலைகளுடன் ஒப்பிட்டனர். கணக்கில் குறைந்தபட்சம் 2000 டாலருடன் திருடப்பட்ட online banking login கடந்த ஆண்டு 65 டாலர் இருந்தது. ஆனால் தற்போது 120 டாலருக்கும்.

ஹேக் செய்யப்பட்ட Coinbase verified கணக்கு சுமார் 610 டாலரும், கிராகன் verified ( 810 டாலர்), Cex.io verified (710 டாலர்) மற்றும் Crypto.com verified (300 டாலர் ) கிடைக்கிறது. ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கு 65 டாலர் மற்றும் இன்ஸ்டாகிராம் 45 டாலர் மற்றும் ட்விட்டர் 35 டாலர் ஆகும். அனைத்து கூகுள் சேவைகளுடனும் இணைக்கப்பட்ட ஜிமெயில் கணக்கு 80 டாலரில் விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட, ஹேக் செய்யப்பட்ட சமூக ஊடக கணக்குகளின் விலையில் சிறிது குறைப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு பேஸ்புக் கணக்கு இப்போது 10 டாலருக்கு குறைவாகக் கிடைக்கிறது. ஆன்லைன் சந்தாக்களிலும் நெட்ஃபிக்ஸ் (1 வருட சந்தா) விலை 44 டாலருக்கும், அடோப் கிரியேட்டிவ் கிளவுட்  160 டாலருக்கும் விற்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More