SensexFalls

StockMarket: நான்காம் நாளில் சரிந்த சென்செக்ஸ்.! 65,754 புள்ளிகளாக வர்த்தகம்.!

By

வாரத்தின் நான்காவது நாளான இன்று 65,854 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 126.30 புள்ளிகள் குறைந்து 65,754.22 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 34.60 புள்ளிகள் குறைந்து 19,576.45 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,880 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,611 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.