,
Sensex

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 63,334 புள்ளிகளாக வர்த்தகம்..!

By

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 6.78 புள்ளிகள் உயர்ந்து 63,334 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,800 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் 3வது நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் 63,467 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 6.78 புள்ளிகள் அல்லது 0.011% என உயர்ந்து 63,334 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 15.90 புள்ளிகள் அல்லது 0.084% சரிந்து 18,800 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,327 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,816 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, HDFC வங்கி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், விப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Dinasuvadu Media @2023