பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 61,940 புள்ளிகளாக வர்த்தகம்..!

பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 61,940 புள்ளிகளாக வர்த்தகம்..!

StockMarkets

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 178.87 புள்ளிகள் அதிகரித்து 61,940 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,315 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 3-வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியிருந்தது. இன்றைய வர்த்தக நாளில் 61,843 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 178.87 புள்ளிகள் அல்லது 0.29% என உயர்ந்து 61,940 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 49.15 புள்ளிகள் அல்லது 0.27% உயர்ந்து 18,315 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,761 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,265 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்ஃபோசிஸ் லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube