ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனுதாக்கல்…..!!

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
  • ஆலையை திறக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.

 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:

Image result for ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை இன்று  விசாரித்தது  உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதனால்    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆளை நிர்வாகம் மனுதாக்கல் செய்துள்ளது.இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment