ஸ்டெர்லைட் ஆலையால் மிக குறைந்த அளவிலே பாதிப்பு – வேதாந்தா தரப்பு நீதிமன்றத்தில் வாதம் !

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே பாதிப்பு உள்ளதாக  வேதாந்தா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றிய போதும் தமிழக அரசு ஆலையை முடியுள்ளதாக வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடியில் ஆலையால் ஏற்படும் பாதிப்பு மிக ககுறைவு என்று நீதிபதிகளிடம் வாதிட்டனர்.

தமிழக அரசின் தீயணைப்பு மற்றும்  சுற்றுசூழல் துறைகளின் சார்பில் ஆலையை நடத்துவதற்கான அனுமதி உள்ளது. எனவே, ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் வாதங்களை கேட்க அடுத்த வாரம் மூன்று நாட்கள் அனுமதி அளித்துள்ளனர்.