உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை, தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, பாதுகாப்புத்துறையில், இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்து வரும் நாடாகவே இருந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு துறை தொடர்பான தளவாடங்களின் இறக்குமதி பட்டியல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே, சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நமது இலக்கு. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்