ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் மாதத்தை விட 3 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று 30.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது;
விவசாயிகள் மட்டுமின்றி 30,000 ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.