ரூ.60 ஆயிரம் செலவில் நடிகர் தனுசுக்கு சிலை! நெல்லை தனுஷ் ரசிகர்களின் அசத்தல்!

  • ரூ.60 ஆயிரம் செலவில் நடிகர் தனுசுக்கு சிலை.
  • மகிழ்ச்சியில் ரசிகர்கள். 

நடிகர் தனுஷ் பிராபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவரது நடிப்பு திறமையாலும், பேச்சு திறமையாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன்வசப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அசுரன் படம் மற்றும் பொங்கலை முன்னிட்டு வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நெல்லையில் உள்ள தனுஷ் ரசிகர்கள், நடிகர் தனுஷிற்கு 60 ஆயிரம் செலவில் சிலை அமைத்துள்ளனர். அந்த சிலையில் தனுஷ் வெட்டி மற்றும் சட்டையுடன் உள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த சிலை அருகே நின்று செல்பி எடுத்துவிட்டு செல்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.