மாநிலங்கள் உருவான தினம் : 6 மாநிலங்களுக்கு பிரதமர் வாழ்த்து…!

இன்று ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் உருவான தினம் என்பதால் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்கள் உருவான தினமான இன்று பிரதமர் மோடி இந்த மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

ஆந்திர மக்களுக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மாநிலம் உருவான நாளில் வாழ்த்துக்கள். ஆந்திர மக்கள் தங்கள் திறமை உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அதனால் தான் அவர்கள் பலவற்றில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் வாழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள மாநிலம் அதன் அழகிய சுற்றுப்புறம் மற்றும் மக்களின் உழைப்பு தன்மைக்காக பரவலாக பேசப்படுகிறது. அவர்களின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு உருவான தினத்தில் வாழ்த்துக்கள். புதுமையான ஆர்வத்தால் ஒரு சிறப்பு முத்திரையை பதித்துள்ளது கர்நாடகா என தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக மாநிலம் வெற்றியின் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக மத்திய பிரதேச மாநிலம் இயற்கை வளம் மற்றும் கலாச்சாரம் நிறைந்தது எனவும் அது உருவான நாளில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சதீஷ்கர் மாநிலம்  நாட்டுப்புற பாடல், நடனம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றால் பெயர் பெற்றது. மேலும் வெற்றிக்கான புதிய உயரங்களை எட்ட வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் அதன் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து வருகிறது. எனவே தொடர்ந்து புதிய உயரங்களை உருவாக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal