ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும்

By balakaliyamoorthy | Published: May 29, 2020 11:44 AM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்.

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமதிகளை அவமதித்து பேசியதால் ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது? என்று அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ். பாரதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்றிருக்கிறார். மேலும், வழக்கறிஞர் அந்தோணி என்பவர் ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc