வெயில் காலம் தொடங்கியாச்சு, எண்ணெய் பசை சருமம் உடையவர்களே ஜாக்கிரதையா இருந்துக்கோங்க

  • எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள்.

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த சரும பிரச்னை தான். இந்த சரும பிரச்சனையை போக்கால் இன்றைய இளம் தலைமுறையினர் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதற்கான தீர்வை செயற்கையான வழிகளில் தேடாமல், இயற்கையான வழிகளில் தீர்வு காண்பது மிகவும் சிறந்தது. வெயில்காலங்களில் எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்வது மிகவும் கடினமான ஒன்று.

எண்ணெய்ப்பசை சருமம்

Image result for எண்ணெய்ப்பசை சருமம்

எண்ணெய்ப்பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்லும் போது, மேலும் அந்த எண்ணெய் பசை தன்மை சருமத்தில் அதிகரித்து விடும். தற்போது இந்த பதிவில் இயற்க்கையான முறையில் இந்த சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவது எப்படி என்று பாப்போம்.

 வெள்ளரிக்காய்

Image result for வெள்ளரிக்காய்

எண்ணெய் பசை சருமம் உடையவர்கள், வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, சருமத்தில் எண்ணெய் வடிவது தடுக்கப்படுகிறது. மேலும், வெள்ளரிச்சாற்றுடன், சிறிது பால்பவுடர் கலந்து முகத்தில் பூசி வந்தால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக இருக்கும்.

தக்காளி

Image result for தக்காளிஎண்ணெய் சருமம் உள்ளவர்கள் தக்காளி பலத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது தடுக்கப்படும். மேலும், தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் கலந்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் எண்ணெய் வடிவது தடுக்கப்படும்.

மோர்

Image result for மோர்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

கடலைமாவு

Related imageஎண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதிலாக கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக மாறிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment