#BREAKING: மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டி.. ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் ..!

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். 
கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட  தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்ப மனுவை அளித்தார். திமுகவில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
1984 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் 9-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ஏற்கனவே மு.க.ஸ்டாலின் 2011, 2016 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
murugan