ஒதுக்கீடு ரத்து போன்ற கோரிக்கை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்.!

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மருத்துவ படிப்பிற்கான தகுதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், OBC-யில் கிரீமிலேயர் பிரிவினரை கணக்கிட சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். இதுவரையில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள நிலையில், நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், அனைத்துக் குடிக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

 

author avatar
murugan