ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த ஐ.டி சோதனை நிறைவு..!

மு.க ஸ்டாலின் மகள் செந்தமாரை வீட்டில் நடந்த வருமான வரிசோதனை நிறைவடைந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாளுடன் பிரச்சாரம் நிறைவடைவதால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் , இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் 12 மணி நேரத்திற்கு பிறகு ஐடி சோதனை நிறைவு பெற்றது. தமிழகத்தில் சென்னை உட்பட 28 இடங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை ,கோவை ,கரூர் ஆகிய இடங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளன. சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், பணம் பறிமுதல் பற்றி குறிப்பிடப்படவில்லை.

சென்னையில் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் வருமானவரி சோதனையை கண்டு நானும் அஞ்சமாட்டேன், திமுகவும் அஞ்சாது என தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan