சரியான ‘வாபஸ்’ பழனிசாமி -அரசாணை ரத்து குறித்து ஸ்டாலின் கருத்து

முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது

By venu | Published: Jul 06, 2020 01:12 PM

முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  11, 12ஆம் வகுப்புகளில் 4 பாடத் தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  குளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி என்று பதிவிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc