#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் நாளை மறுநாள் காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு மாத அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் கூறுவது மசோதா நீர்த்துப்போகச் செய்வதாகும்.

அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மக்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். அவகாசம் கோரியதை அமைச்சர்கள் குழு திட்டமிட்டு மக்களிடம் மறைத்து விட்டார்கள். 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஒப்புதல் தருவதாக ஆளுநர்  கூறியதாக தகவல் வருகிறது.

#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!

சமூகநீதியைச் சீர்குலைக்கும் அப்படி ஒரு கருத்து முன் வைக்கப்பட்டதா..? என அமைச்சர்கள் விளக்க வேண்டும். 7.5 % உள் ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் முதல்வர் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆளுநர் அவகாசம் கோரும் மருத்துவ கலந்தாய்வு நடத்தாமல் இருக்க முடியுமா..? மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
murugan