திமுக தலைவராக 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முக ஸ்டாலின்.! கலைஞர் நினைவிடத்தில் மரியாதை.!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக தலைவர் முக ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின் அடுத்த தலைவர் யார் என்று அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், கடந்த 2014- ஆம் ஆண்டு அழகிரியை கட்சியில் இருந்து நீங்கியதால், கலைஞர் மறைந்து சுமார் 20 நாட்களுக்கு பிறகு திமுக கூட்டத்தில் ஒருமனதாக மு.க ஸ்டாலினை தலைவராக தேர்தெடுத்தனர். இதனையடுத்து, கட்சிக்காக அயராத உழைத்து வரும் ஸ்டாலின் பல இன்னல்களை சந்தித்தும் தயங்காத தூணாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் தலைவர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் திமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முக ஸ்டாலினுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்