முதல் ஆளாக குரல் கொடுப்பவர் ஸ்டாலின்-முதல்வர் பினராயி விஜயன்..!

கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக வந்து நிற்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், படிப்படியாக முன்னேறி வந்தவர் ஸ்டாலின். கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக வந்து நிற்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  நாட்டை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிரானவர்களை தமிழக  முதலமைச்சர் ஒருங்கிணைத்து வருகிறார்.

மலையாளிகளும், தமிழர்களும் ஒரே மண்ணின் மைந்தர்கள். இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதர, சகோதரிகள். மிசா கால கட்டத்தில் நானும், ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார். முதல்வர் மதசார்பின்மை, பன்மைத்துவம், சமூக நீதிக்காக அவர் தொடந்து போராடுவார். ஸ்டாலினின் 23 வயது வரையிலான வாழ்க்கையையும், தமிழ் சமூக வரலாற்றையும் ‘உங்களில் ஒருவன் ‘ சொல்கிறது. கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார்.