ஜூலை 21ஆம் தேதி இந்தியா வருகை தரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.!

By

Srilanka PrezIndia

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூலை 21ஆம் தேதி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வரும் ஜூலை 21 ஆம் தேதி, இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த பயணத்தில் இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை  சந்திக்கிறார்.

moea srilanka
moea srilanka [Image – mea.gov]

மேலும் இந்திய பிரதமர் மோடியுடன், இரு நாடுகளின் நல்லுறவுகள் தொடர்பாக கலந்துரையாடுவார். அவரது இந்த இந்திய பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும் மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து மேம்படுத்தவும் உதவும். இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கை ஒரு முக்கிய பங்களிப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.