நேற்றைய  போட்டியில் பங்களாதேஷ் Vs இலங்கை அணி மோத இருந்தது. இப் போட்டியானது  பிரிஸ்டல் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

போட்டி ரத்து செய்ததன் மூலம் பங்களாதேஷ் , இலங்கை ஆகிய  அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.இதன் மூலம் இலங்கை அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளியையும்,பங்களாதேஷ் அணி புள்ளி பட்டியலில்  3 புள்ளியையும் பெற்று உள்ளது.

இலங்கை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் விளையாட இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி  ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.