29 C
Chennai
Saturday, October 23, 2021

நாகை மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரிசோதனைக்கு பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More