ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து வாங்கும் இலங்கை!

ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து வாங்கும் இலங்கை!

இந்தியாவிடமிருந்து இலங்கை ஒரு கோடி கொரோனா  தடுப்பூசிகளை வாங்குவதற்கு சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் வீரியத்தை குறைப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்படவும் செய்கிறது, நன்கொடையாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியா 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு கொடுத்துள்ளது.

அவை இலங்கையில் முன்களப் பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட்டு வருகிறது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் தேவை இலங்கையில் அதிகம் இருப்பதால் தற்பொழுது ஒரு கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வாங்குவதற்கு இலங்கை சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறதாம். மேலும் இலங்கைக்கு தேவையான 20 சதவீத தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு தரும் எனவும் வாக்களித்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube