SRH vs  KKR: டாஸ் வென்றது KKR அணி முதலில் பேட்டிங் தேர்வு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs  KKR போட்டியில் டாஸ் வென்று, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் .

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. 6 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே SRH 9-வது மற்றும் KKR 8-வது இடத்தில் இருக்கின்றன.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதியதில் ஹைதராபாத் அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாஸ் வென்ற, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(C), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம்(C, ஹென்ரிச் கிளாசென்(W), ஹாரி புரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி நடராஜன்

author avatar
Muthu Kumar