ஸ்குவாஷ் உலகக்கோப்பை – எகிப்து அணி சாம்பியன்!

By

Squash World Cup

மலேசிய அணியை வீழ்த்தி ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரை வென்றது எகிப்து அணி. 

ஸ்குவாஷ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எகிப்து அணி. சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஸ்குவாஷ் உலக கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில், எகிப்து அணி சாம்பியன் படத்தை தட்டி சென்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மலேசிய அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது எகிப்து அணி. கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்ற போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், சாம்பியன் பட்டத்தை வென்றது எகிப்து அணி. மேலும், ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரில் மலேசிய இரண்டாவது இடம், இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் 3வது இடம் பிடித்துள்ளது.