ஸ்புட்னிக் வி 91.4 % திறன் கொண்டது – ரஷியா..!

ஸ்புட்னிக் வி 91.4 % திறன் கொண்டது – ரஷியா..!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஸ்புட்னிக் வி ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா வெளியிட்டு வருகிறது. இதையெடுத்து,  ஸ்புட்னிக் வி-ன் மேலும் ஒரு பரிசோதனை முடிவுகளை ரஷியா நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஸ்புட்னிக் வி செயல்திறன் 91.4 சதவிகிதம் உள்ளது என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube