உலக செஸ் சாம்பியன்ஷிப் : டிராவில் முடிந்த 13-வது சுற்று! வெற்றிபெறப்போவது யார்?
உலக செஸ் சாம்பியன்ஷிப் 13ஆவது சுற்று டிராவில் முடிந்த நிலையில், நாளை இறுதிசுற்றான 14-வது சுற்று நடைபெறவிருக்கிறது.
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இன்று 13வது சுற்று ஆட்டம் நடைபெற்று அது சமனில் முடிவடைந்தது.
இந்த போட்டியின் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை சமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, 11-வது சுற்று வரும் போது மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து சிறப்பாக விளையாடிய குகேஷ் வெற்றிபெற்றார்.
அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும் வெற்றிபெற்றார். 12-வது சுற்று முடிவடைந்த சூழலில், இரண்டு வீரர்களுமே தலா 6 புள்ளிகளுடன் சமனில் இருந்தனர். அதன்பிறகு முக்கிய சுற்றான 13-வது சுற்று இன்று நடைபெற்றது. இதில், இருவருமே சமநிலையாக விளையாடி அரை அரை புள்ளிகள் பெற்றுக்கொண்டார்கள். எனவே, 13-வது சுற்றும் சமநிலையில் முடிந்திருக்கிறது.
இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இன்னும் ஒரே ஒரு சுற்று மட்டுமே மீதம் உள்ளது. இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால் நாளை நடைபெறவுள்ள கடைசி சுற்று ஆட்டத்தில் யாராவது வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவார். எனவே, யார் வெற்றிபெறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.