ரொனால்டோ, 4,400 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்தார்.!
ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் தங்கள் கிளப் அணியில் இணையுமாறு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கசிந்தது.
தற்போது அந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் 2025ஆம் ஆண்டு வரையிலாக ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை உறுதி செய்யும் விதமாக ரொனால்டோ மற்றும் அல்-நஸ்ர் கிளப் தங்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளது.
அணியின் ஜெர்ஸியை ரொனால்டோ கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை ரொனால்டோ தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும் அல்-நஸ்ர் கிளப் இது குறித்து, வரலாற்றில் இது முக்கியமானது என்று கூறியுள்ளது. ரொனால்டோ, வணிக ஒப்பந்தம் உட்பட சுமார் 500 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ.4,400 கோடி) வரை சம்பாதிப்பார் என்று அல்-நஸ்ர் கிளப் கூறியது.