அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியடைந்தது.
12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை சந்தித்தது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஆறு முறை பட்டம் வென்ற ஜெர்மனிக்கு எதிராக 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடைசி நிமிடத்தில் பாபி ஒரு கோலை அடித்தார். ஆனால், அது ஆறுதல் கோலாகவே அமைந்தது.
முதல் கால்பகுதி முடிந்தபோது 1-0 என ஜெர்மனி முன்னிலையில் இருந்தது. ஜெர்மனிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றை கோலாக மாற்றினார். ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் ஜெர்மனி ஆறு முறை சாம்பியனாகவும், இந்தியா நடப்பு சாம்பியனாகவும் உள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…