சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் விளாசி புதிய சாதனை படைத்த ஹிட்மேன்..!

- ரோஹித் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.
- இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இன்று கடைசி டி 20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிமுதலில் பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
தொடக்க வீரர் ரோஹித் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் குவித்தார்.அதில் 6 பவுண்டரி , 5 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் ரோஹித் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசி இருந்தார்.
இன்றைய போட்டியில் 5 சிக்ஸர் விளாசியதன் மூலம் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர்.
இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52 , மற்றும் டி 20 போட்டியில் 120 சிக்ஸர் விளாசியுள்ளார். மொத்தமாக ரோஹித் சர்வதேச போட்டியில் 404 சிக்ஸர் விளாசி உள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார். இந்த ஆண்டு 72 சிக்ஸர் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025