இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஏழாவது மற்றும் எட்டாவது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் காலை 10:30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன.
இந்த நிலையில் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் மோதுகிறது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 156 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளது.
இதில் பாகிஸ்தான் அணியே அதிக போட்டிகளில் வெற்றி உள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி 92 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி அல்லது 59 கோடிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 4 போட்டிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஒரு போட்டியானது டிராவில் முடிந்துள்ளது.
எனவே இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தனது நிலையை விட்டுக்கொடுக்காமல் விளையாடும். அதேபோல இலங்கை அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக தனது வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடும் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது போட்டியானது தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணி:
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(W), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரனா, டில்ஷான் மதுஷங்க
பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(C), முகமது ரிஸ்வான்(W), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…