IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

Published by
murugan

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 214 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக கேப்டன் கே. எல் ராகுல் 55, நிக்கோலஸ் பூரான் 75 ரன்கள் குவித்தனர். மும்பை அணியில் நுவன் துஷாரா, பியூஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். 215 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட தொடங்கினார். இருப்பினும் மும்பை அணி 33 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டி நடைபெறுமா..? என எதிர்ப்பார்த்த நிலையில் மழை நின்றபின் மீண்டும் போட்டி இந்த வீத ஓவரையும் குறைக்காமல்  தொடங்கியது.

இருப்பினும் சிறிது நேரத்திலே சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 28-வது பந்தில்  சிக்ஸர் அடித்து அரைசதம் நிறைவு செய்தார். மறுபுறம்  நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 22 ரன்கள் எடுத்திருந்தபோது க்ருணால் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்க வந்த வேகத்தில் 3 பந்தில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ரோஹித் சர்மா 68 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ரோஹித் 38 பந்தில்  3 சிக்ஸர், 10 பவுண்டரி என மொத்தம் 68 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கி வழக்கம் போல நிலைத்து நிற்காமல் 16 ரன் எடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த நேஹால் வதேரா 1 ரன் மட்டுமே எடுத்தார். இதைதொடர்ந்து களமிங்கிய நமன் திர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 62* ரன்கள் சேர்த்து கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட்டையும், க்ருனால் பாண்டியா , மொசின் கான்,  தலா 1 விக்கெட்டை பறித்தனர். லக்னோ அணியும், மும்பை அணியும் 14 போட்டிகள் விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்துள்ளனர். இதில் மும்பை அணி 4 வெற்றியும், 10 தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 7 வெற்றியும், 7 தோல்விகளையும் அடைந்துள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

2 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

3 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

3 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

4 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

4 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

4 hours ago