சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்-தமிழ் புலவரின் கலக்கல் ட்வீட்
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து அந்த அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்று 2 வது தகுதிச்சசுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்ஆகிய அணிகள் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணம் பந்து வீச்சுதான். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் 4 ஒவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போது ஹர்பஜன் சிங் நேற்று பெற்ற வெற்றி குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.இவர் அதிகமாக தமிழில் தான் ட்வீட் செய்வார்.குறிப்பாக தமிழகத்தில் என்ன நிகழ்வாக இருந்தாலும் அதற்கும் தமிழில் தான் ட்வீட் செய்வார்.இவர் அவ்வாறு செய்வது தமிழக ரசிகர்கள் மத்தியில் இவரது டீவீட்க்கு நல்ல வரவேற்பு இருக்கும்.மேலும் இவரை தமிழ் புலவர் என்றும் கூறிவருகின்றனர். அந்த வகையில் நேற்று அவர் செய்த ட்வீட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let’s do it, #CSK pic.twitter.com/UxLfDY8w4o
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 10, 2019
அவர் நேற்று பதிவிட்ட ட்வீட்டில் ,இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு ஐபிஎல் சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let’s do it என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.