மும்பை அணியை சுருட்டிய சென்னை அணி ! சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது .இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் மற்றும் டி காக் களமிறங்கினார்கள்.
தொடக்க ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது.ஆனால் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது.டிகாக் 29 ரன்கள், ரோகித் 15 ரன்கள்,சூரியகுமார் 15 ரன்கள்,க்ருனால் பாண்டியா 7 ரன்கள்,கிஷான் 23 ரன்கள் ,ஹார்திக் 16 ரன்கள், ராகுல் சாகர் 0 ரன் ,மெக்லனகன் 0 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் போலார்டு-41* ரன்கள் ,பூம்ரா – 0* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.சென்னை அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்,இம்ரான் தாஹீர்,தாகூர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இதன் மூலம் சென்னை அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது மும்பை அணி.இதனை அடுத்து 150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.