ரோகித்-தவான் இல்லை..அப்போ யாரூ..? கேள்வி முதல் கேப்டன் பதவில் இருந்து விலகிய வில்லியம்சன் வரை

Default Image
  • தொடக்க வீரர்களாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் பிரித்விஷா களமிரங்க உள்ளனர்.
  • நியூசிலாந்து கேப்டனாக  டாம் லதம் அணியை வழிநடத்துகிறார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.தொடரை முழுவதுமாக வென்று நியூசிலாந்தை வாரிசுருட்டி மடித்தது.

இந்நிலையில் ஹாமில்டனில் இன்று  இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பேட்டிங்க் செய்ய உள்ளது.

இந்திய அணியில் எப்பொழுதும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -தவான் ஜோடி களமிரங்கும் ஆஸி., தொடரின் போது தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து எதிரான டி20 தொடரி  போது ரோகித்துக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நியூ.,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அணியின் தொடக்க ஆட்டக்காரர் இல்லாத சமயத்தில் அணி திரணால் இருக்க கேப்டன் விராட் அன்மைக்காலமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அதே போல் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக அறிமுக போட்டியிலேயே மயங்க் அகர்வால் – பிரித்வி ஷா களமிறங்குகின்றனர்.

மேலும் டி20 போட்டியில் தொடர் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பதவி விலகினார்.இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் செயல்படுகிறார்.

இந்திய அணி வீரர்கள்: அகர்வால், ஷா, கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ராகுல், கேதார் ஜாதவ்,குல்தீப் யாதவ், மொகமட் ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்குர்,  ஜஸ்பிரித் பும்ரா.

நியூஸிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், ராஸ் டெய்லர், ஹாமிஷ் பென்னட்,நீஷம், கிராண்ட் ஹோம், சாண்ட்னர், சோதி, டிம் சவுத்தி, 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்